மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புப் பிரதானி – இராணுவத் தளபதி சந்திப்பு

54 0

மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புப் பிரதானி லெப்டினன் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் நல்லெண்ணப் பயணமாக தற்போது இலங்கை வந்துள்ள நிலையில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ என்டியூ நேற்று வியாழக்கிழமை (08) இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

வருகை தந்த இராணுவ பிரதானி இராணுவ தலைமையக நுழைவாயிலில் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய வரவேற்கப்பட்டதுடன், அவருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே சந்திப்பின் போது மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புப் பிரதானி இலங்கை இராணுவம் மற்றும் மாலைத்தீவு பாதுகாப்புப் படை ஆகிய இருதரப்பு விவகாரங்கள் தொடர்பாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.