இங்கிலாந்தில் உள்ள மிக பழைமையான சிறை காதலர்களுக்கு மிகவும் வித்தியாசமான அனுபவத்தை வழங்க ஆயத்தமாகி வருகிறது. காதலர் தினத்தன்று காதலர்கள் இந்த சிறைக்கு வந்து உணவு சாப்பிட முடியும். காதலர்கள் தங்கள் இணையுடன் இந்த பழைமை மிக்க சிறையில் தங்களை அடைத்துக் கொண்டு உள்ளிருந்த படி தாங்கள் விரும்பிய உணவை ஆர்டர் செய்து சாப்பிட முடியும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த சிறை காதலர் தினத்தை சிறப்பாக மாற்றுவதற்கு தயாராகி வருகிறது. இங்கு காதலர்கள் வழக்கமான சிறை உணவை விட சிறப்பான உணவை சாப்பிட முடியுமாம். சிறையில் உணவு சாப்பிடுவதற்கான கட்டணம் 215 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 17 ஆயிரம் என துவங்குகிறது. இதுதவிர 900 ஆண்டுகள் பழமையான நார்மன் க்ரிப்ட் வளாகத்திலும் டின்னர் செல்லலாம்.
இதற்கான கட்டணம் 230 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. காதலர் தினத்தை ஒட்டி மிக பழமையான வளாகத்தில் உள்ள ஆறு பிரத்யேக லொகேஷன்களில் ஒன்றை தேர்வு செய்து காதலர்கள் அங்கு தங்களது நேரத்தை செலவழிக்கலாம்.