புவி வெப்பமயமாதல் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறியுள்ளது

67 0

புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்ஷியஸுக்குள் கட்டுப்படுத்த உலக நாடுகளின் தலைவா்கள் வரம்பை நிா்ணயம் செய்தனா். ஆனால், நிா்ணயிக்கப்பட்ட அளவான 1.5 டிகிரி செல்ஷியஸை  முதல் முறையாக ஒரு வருடத்தில் கடந்து விட்டதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை சேவை தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு நடந்த பாரீஸ் ஒப்பந்தத்தில் புவி வெப்பமயமாதல்  அளவை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கு அவசரமாக நடவடிக்கை எடுப்பதன் மூலம் புவி வெப்பமயமாதல் வேகம் குறைவடையும் என  விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

2023 ஆம் ஆண்டு முதல் இவ் வருடம்  ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில் வெப்பமயமாதல் 1.52 டிகிரி செல்ஷியஸை  எட்டியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை தரவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஜனவரி மாதம் கடும் வெப்பம் நிலவிய எட்டாவது மாதமாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு எல் நினோவின் தாக்கம் காரணமாக வெப்பநிலை அதிகரித்துள்ளது.

பசிபிக் பெருங்கடலில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பது எல் நினோ எனப்படும்.