பொலிஸ் தடுப்பிலுள்ள சந்தேக நபர்களுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்தவர் அடையாளம் காணப்பட்டார்!

63 0

கொழும்பு, ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள்  இருவருக்கு பாலில் விஷம்  கலந்து கொடுத்த நபரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

அண்மையில்  ஜிந்துபிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர்கள் ஆட்டுப்பட்டி தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவர்களைப் பார்வையிடச் சென்ற நபர் ஒருவராலேயே இவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டது.

பொலிஸ் நிலையத்துக்கு சந்தேக நபர் சென்ற காட்சிகள் அருகிலிருந்த கடை ஒன்றின் சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதுடன் அவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.