அயோத்தி ராமர் கோவிலுக்குச் விஜயம் செய்யவுள்ளார் நாமல்

60 0

நாமல் ராஜபக்ஷ இந்தியாவில் உள்ள அயோத்தி ராமர் கோயிலுக்கு தனிப்பட்ட ரீதியில் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இரு நாட்கள் தனிப்பட்ட ரீதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் நாமல் ராஜபக்ஷ, 9 ஆம் திகதி மாலை ராமர் கோவிலில் சிறப்பு தரிசனம் மற்றும் பூஜை வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

அயோத்தி மற்றும் புதுடில்லியில் தங்கியிருக்கும் காலங்களில் சில முக்கிய பிரமுகர்களை தனிப்பட்ட முறையில் நாமல் ராஜபக்ஷ சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜபக்சவின் அயோத்தி ராம் கோவிலுக்கான விஜயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் மத உறவுகளை வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.