பெலியத்தயில் ஐவர் சுட்டுப் படுகொலை: முன்னாள் கடற்படை சிப்பாயின் மனைவி, தந்தைக்கு விளக்கமறியல்

70 0

பெலியத்தயில் இடம்பெற்ற ஐவரின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் மனைவி மற்றும் தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பிரதான சந்தேக நபரான முன்னாள் கடற்படை சிப்பாயின் மனைவி மற்றும் அவரது தந்தை ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்திய வேளை பெப்ரவரி 21 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருவரும் இன்று 8 ஆம் திகதி வியாழக்கிழமை அத்தனகல்ல  நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 22 ஆம் திகதி பெலியத்தயில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் எமது மக்கள் கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட ஐவர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 10 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.