சிரியா விஷவாயு வெடிகுண்டு தாக்குதல்: இன்று அவசரமாக கூடுகிறது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்

265 0

சிரியாவில் அரசுப்படை விமானங்கள் வீசிய விஷவாயு வெடிகுண்டு தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்க இன்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக கூடுகிறது.

சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசு ஆதரவு  விமானப்படையின் போர் விமானங்கள் இன்று விஷவாயு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இட்லிப் மத்திய மாகாணத்தில் உள்ள கான் ஷேகுன் நகரில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 100 க்கும் மேலாக அதிகரித்துள்ளதாக ஐ.நா மனித உரிமை கண்கானிப்பகம் தெரிவித்துள்ளது.

குளோரின் வி‌ஷ வாயுவை பீப்பாயில் அடைத்து சிரிய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் வீசியதாக ஐ.நா. சபை அமைப்பு தனது விசாரணையில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசரமாக இன்று கூடுகிறது.

முன்னதாக அமெரிக்கா இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. அரசுப் படைகளின் செயல்பாடுகள் பொதுமக்களை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.