வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் தாக்கியதாகல் சிறைக்காவலர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (08) இடம்பெற்றுள்ளது.
தாக்குதலினால் வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கமறியலில் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பேரில் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.