உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிராக 30 மனுக்கள் தாக்கல்

61 0

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக  உயர் நீதிமன்றத்திற்கு இதுவரை 30 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றம் வியாழக்கிழமை இன்று வியாழக்கிழமை (08) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியதையடுத்து  இடம்பெற்ற  அறிவிப்பின் போதே இதனை சபைக்கு அறிவித்த சபாநாயகர், 2024 ஜனவரி 23 ஆம் திகதி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட ஆறு மனுக்கள் மற்றும் 2024 ஜனவரி 24 ஆம் திகதி அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட பதினெட்டு மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ‘பயங்கரவாத எதிர்ப்பு’ எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு மேலும் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, அவற்றின் பிரதிகள்  கிடைக்கப்பெற்றுள்ளன என சபைக்கு அறிவித்தார்.