இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமையின் (OGP) நிகழ்ச்சித் திட்டத்துடன் தொடர்புடைய மூன்றாவது தேசிய செயற்திட்டத்தின் (NAP) தயாரிப்பதில் பங்களிக்கும் சிவில் சமூக அமைப்புக்கள் (CSOs) சிவில் கூட்டு முயற்சிகளிலிருந்து விலகுவதற்காக ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளன.
இது அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள், குறிப்பாக நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை நிறைவேற்றுவது மற்றும் பரவலான எதிர்ப்பையும் மீறி பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவற்றிற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், சிவில் சமூக வெளியை அடக்குவதற்கும், பொது மக்களின் அடிப்படை சுதந்திர மீறலுக்கும் எதிராக இந்தக் கொள்கை ரீதியான நிலைப்பாட்டிட்கு எம்மை நிர்ப்பந்தித்துள்ளன. இந்த முடிவானது குழுவாக தீர்க்கமான முறையில் பரிசீலிக்கப்பட்ட பின்னர், இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமையின் (OGP) அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணாக நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆபத்தான முன்னெடுப்புகளுக்குப் பதிலளிக்கும் விதமாக எடுக்கப்பட்டது.
இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமையின் (OGP) சிவில் சமூக அமைப்புகளின் இணைப்பாளர்கள் என்ற வகையில், ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) மற்றும் சர்வோதய ஷ்ரமதான இயக்கம் இந்த கூட்டு முடிவை உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு இன்று கடிதம் மூலம் அறிவித்துள்.ளன.