தெனியாய ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் விசேட மயக்க மருந்து நிபுணர் வெளிநாடு சென்ற காரணத்தினால் வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெனியாய ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அதியட்சகர் ரந்தீவ் அபேவிக்ரம தெரிவித்தார்.
கொட்டபொல பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிபுண ரணவக்க தலைமையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
குறித்த வைத்தியசாலையில் மகப்பேறு மற்றும் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் இருந்த போதிலும் விசேட மயக்க மருந்து நிபுணர் இல்லாததால் சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.