தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்விக்காக வழங்கப்பட்டு வந்த வட்டியில்லா கடன் திட்டம் கடந்த காலங்களில் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
ஐக்கிய மக்கள் சக்தி, இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் பாராளுமன்றத்தின் கனவத்திற்கு கொண்டு வந்த போது கடனை வழங்குவதாக தெரிந்த போதிலும், KIU மற்றும் ஹொரைசன் போன்ற தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கடன் வசதி இன்னும் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கடனுதவி வழங்குவதற்கான அனுமதி மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கான கற்கை நெறிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது, இந்த கடன் வழங்கப்படாமல் உள்ளதால், விரைவில் இந்த கடன் வசதிகளை வழங்குங்கள். இந்த கடன் வசதி வழங்கப்படாததால் அவர்களுக்கு பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கான வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
மக்கள் வங்கியும் இலங்கை வங்கியும் பொறுப்பான நபர்கள் இன்றி பெரும் செல்வந்தர்களுக்கு உரிய கடன்களை வழங்கி, அந்தக் கடன்கள் கோடிக்கணக்கில் செலுத்தப்படாத நிலையில்,இவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டாலும், இந்த இரு பல்கலைக்கழகங்களில் சில மாணவர்கள் கடனை செலுத்தாத காரணத்தால், புதிய மாணவர்களுக்கு கடன் வழங்க மறுப்பதை ஏற்க முடியாது. இது அரசாங்கத்துடன் தொடர்புடைய நம்பகத்தன்மை சார்ந்த பிரச்சினை என்பதால் இதனை உடனடியாக இன்றே நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதி,அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கியின் உத்தரவுகளை இந்த வங்கிகள் புறக்கணித்தால், இதில் ஈடுபட்டுள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கோரிக்கை விடுத்தார்.