அடுருப்பு வீதி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 3 உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜிந்துபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்கள், வெளிநபர் ஒருவர் விஷம் அடங்கிய பால் பொதியை வழங்கிய சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.