நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை பிரிட்டன் தொடர்ந்து கண்காணிக்கும்

76 0

இலங்கையின்நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை  உன்னிப்பாக அவதானிக்கப்போவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஆன் மேரி டிரெவெல்யான் இதனை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச இணையசேவை வழங்குநர்கள் உட்பட ஏனையவர்களின் கரிசனைகளிற்கு மத்தியில் பிரிட்டன் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளதாக பிரிட்டன் அமைச்சர் தெரிவித்துள்ளார்

கடந்தவருடம் நான் இலங்கை ஜனாதிபதியை சந்தித்தவேளை இந்த சட்டம் கருத்து சுதந்திரம் பொருளாதார சுதந்திரத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்த கரிசனையை தெரிவித்திருந்தேன் என தெரிவித்துள்ள அவர் ஜனவரி 25ம் திகதி தென்னாசியாவிற்கான இராஜாங்க அமைச்சர் தாரிக் பிரபு இலங்கை வெளிவிவகார அமைச்சரை சந்தித்தவேளை இது குறித்த கரிசனையை வெளியிட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.