தேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அதுபோன்றதொரு வாய்ப்பை ஐக்கிய மக்கள் சக்தியும் கோரியுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க இந்தியாவிற்கு ஐந்து நாள் விஜயத்தினை மேற்கொண்டுள்ளார் இந்த விஜயத்தின் போது அவர் இந்திய வெளிவிவகார அமைச்சர் உட்பட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் இவ்வாறான விஜயமொன்றின் மூலம் தேசியமக்கள் சக்திக்கு கிடைக்ககூடிய சாதகதன்மையை கருத்திலெடுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி இந்தியாவிற்;கு விஜயம் மேற்கொள்வதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளது.
இதற்கு இந்தியா சாதகமாக பதிலளித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.