நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் 728 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 558 சந்தேக நபர்களும் ஏனைய குற்றங்கள் தொடர்பில் 170 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 14 சந்தேக நபர்கள் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏனைய குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 170 சந்தேக நபர்களில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 18 சந்தேக நபர்களும் ஏனைய குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 145 சந்தேக நபர்களும் திறந்த பிடியாணை பெற்றவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 122 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் , 101 கிராம் ஐஸ் போதைப்பொருள் , 5 கிலோகிராம் 217 கிராம் கஞ்சா , 23,521 கஞ்சா செடிகள், 404 கிராம் மாவா , 1,852 போதை மாத்திரைகள், 171 கிராம் மதன மோதகம் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.