தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை

101 0

தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு மத்திய குழுவிலோ பொதுச் சபையிலோ வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்டத் தலைவர் ச.குகதாசன் தெரிவித்தார்.

அத்துடன் தமிழரசுக் கட்சியின் தற்போது நடைமுறையிலுள்ள யாப்புக்கமைய தலைவர் தெரிவு இடம்பெற்றது என அவர் குறிப்பிட்டார்.

ஊடக  நிகழ்ச்சில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பொதுச்செயலாளர் பதவிக்கு மாவை சேனாதிராஜா வாக்கெடுப்பை கோரவில்லை என்றும் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றார்களா என்பது தொடர்பான வாக்கெடுப்பே இடம்பெற்றது எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் வாக்கெடுப்பானது சுமந்திரன் மற்றும் அவருக்கு எதிரானவர்களால் இணைந்தே நடத்தப்பட்டது என்றும் இரண்டு கைகளை உயர்த்திய சம்பவம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறினர்.