வடமாகாண ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாவல்கட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தினர்

73 0

சாவல்கட்டு கடற்கரையில் இறங்குதுறை அமைத்து, அந்த இறங்குதுறைக்கான பெயர்ப்பலகை நிறுவியதன் காரணமாக, இறங்கு துறையில் அமைக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகையினை மானிப்பாய் பிரதேச சபையினர் பொலிஸாருடன் இணைந்து, உடைத்து எறிந்து விட்டதாகவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதாகவும் குற்றஞ்சாட்டி, முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

இந்த போராட்டத்தின் போது, யாழ் மாவட்ட செயலகத்தில் அரச அதிபரைச் சந்தித்து கலந்துரையாடினார். உள்ளுராட்சி திணைக்களம் சம்பந்தப்பட்டு மன்றத்தால், வட மாகாண ஆளுநரைச் சந்தித்து, கடற்றொழிலாளர்களின் அபிவிருத்தி செயற்திட்டங்களைத் தடுக்க வேண்டாம் என்று கோரிக்கை முன்வைத்ததுடன், அரச நிதியில் இறங்குதுறைமுகம் புனரமைப்பு செய்யவில்லை என்றும் மீனவர்களின் சிறு நிதியில் இறங்குதுறைமுகம் புனரமைப்பு செய்ததாகவும், பிடுங்கி எரிந்த பெயர்ப்பலகையை அதே இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்து, முற்றுகை போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.