நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கெஹலியவுக்கு சபாநாயகர் அனுமதி!

65 0

நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு புதன்கிழைமை (7) ஆரம்பிக்கும் நிலையில், அதில் பங்குபற்றுவதற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதி வழங்கியுள்ளார்.

ரம்புக்வெலவை நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்குமாறு அவரது செயலாளர் ஒருவர் விடுத்த கோரிக்கையையடுத்து சபாநாயகர் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

இதன்படி, கெஹலிய ரம்புக்வெல்லவை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வருமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.