தேசிய ரீதியில் மக்களின் காணி பிரச்சனை தொடர்பாக அடுத்த கட்ட நகர்வை நோக்கிய திட்டமிடல் பிரகடனம் இன்று நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் வெளியிடப்பட்டது.
இலங்கையில் உள்ள மக்களின் காணி தொடர்பான பிரச்சனைகளை பாதிக்கப்பட்ட மக்களின் அனுபவ பகிர்வின் மூலம் கேட்டறிவதற்கும் புதிய பிரச்சனைகளை இனங்காணுவதற்குமான 3நாட் செயலமர்வு ஒன்று தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் யாழ் மாவட்டத்தில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது.அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயலமர்வில் காலி, கம்பஹா, கொழும்பு, புத்தளம், யாழ்ப்பாணம், மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, மெனராகல, முல்லைத்தீவு, கிளிநொச்சி, குருநாகல், அம்பாறை ஆகிய பிரதேசங்களில் தமது காணியை பறிகொடுத்துள்ள மக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இதில் தமிழ்,சிங்களம்,முஸ்லிம், இனத்தவரும் கலந்து கொண்டு தமது பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.
பல்வேறு காரணிகளால் தமது காணிகளை இழந்த மற்றும் தமது காணிகளுக்காக போராடி வெற்றி பெற்ற மக்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு அரசுக்கு எந்த முறையில் அழுத்தங்களை கொடுப்பது என்றும் மக்கள் போராடி வெற்றி கொண்டதன் படிப்பினைஎன்பவற்றை அறிந்து கொள்ளவும், அடுத்த கட்ட திட்டமிடல் மேற்கொள்வதும் இதன் நோக்கமாகும்.
அகதி முகாம் மக்களின் நிலைதொடர்பாகவும் மீள் குடியேறியுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனை மற்றும் தேவைகள் தொடர்பில் நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு அதை அறிந்து தென்னிலங்கை மக்களிடையே எடுத்துச்செல்வதும் இந்த அமர்வின் நோக்கமாக உள்ளது. அந்த வகையில் கண்ணகி முகாம் மற்றும் ஊறணி பகுதிகளுக்கு கள விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் அரசால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி, இராணுவத்தின் ஆக்கிரமிப்பு, மற்றும் யானை தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மற்றும் பல போராட்டங்களின்னுபவங்கள் அதனூடாக வெற்றி பெற்ற காரணி என்பவற்றை தெரிவு செய்து அக் காரணிகள் மற்றறை போராட்டங்களுக்கு சாத்தியப்படுமா என்பதனை ஆராய்ந்து காணி மீட்பு போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு திட்டமிடப்படவுள்ளது. அத்துடன் 3 இனத்தவரும் இணைந்து ஒருமித்த போராட்டத்தை அகிலஇலங்கை ரீதியாக முன்னெடுப்பதற்கான திட்டமும் ஆரயப்படவுள்ளது. அதன் இறுதி வடிவமாக மக்கள் ஜனாதிபதியிடம் எதை கோருகிறார்கள் என்பதனை ‘நல்லூர் பிரகடனத்தின் மூலம் அறிவிக்கப்பட்டது.