2009ல் இந்தியாவின் துணையுடன் இலங்கை இனவெறி அரசு நடத்திய தமிழினப் படுகொலைக்கு எதிராகத் தமிழகத்தில் எழுந்த குரல்களை நசுக்க தி.மு.க. அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டது என்கிற உண்மையை திரு வைகோ மீது திமுக அரசு தொடுத்திருந்த தேசத்துரோக வழக்கு அம்பலப்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் இனப்படுகொலைக்குத் துணைநின்றதுடன் இனப்படுகொலைக்கு எதிரான குரல்களை ஒடுக்கவும் முயன்ற திமுகவுக்கு தமிழ்மக்களிடம் வாக்கு கேட்க என்ன தகுதி இருக்கிறது என்கிற கேள்வியை மக்கள் மன்றத்தில் எழுப்புவதற்காக ராதாகிருஷ்ணன் நகரில் தமிழ் உணர்வாளர்கள் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க இருக்கின்றனர். 5.4.2017 புதன்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்தத் துண்டுப்பிரசுரப் பிரச்சாரத்தில் ஓவியர் வீரசந்தானம் தமிழறிஞர் கி.த.பச்சையப்பன் இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
இடம்: புது வண்ணாரப்பேட்டை மார்க்கெட்
நேரம்: 5.4.2017 புதன்கிழமை காலை 9 மணி.