ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி போல் கோட் ப்ரேக்கும், வடமாகாண முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
வடமாகாண முதலமைச்சரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், வடமாகாணத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன.
வடமாகாணத்தில் ஐரோப்பிய ஒன்றியம் எவ்வாறான செயற்றிட்டங்களில் ஈடுபட வேண்டுமென்றும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களில் எவ்வாறு ஒத்துழைப்புக்களை வழங்குவது என்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.