கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் சர்வதேச மன்னிப்பு சபை அணி சந்தித்து கலந்துரையாடல்

257 0

பங்குனி மாதம் முழுவதையும் வீதியில் களித்த சோகம்   தொடரும் கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் சர்வதேச மன்னிப்பு சபை செயலாளர் உள்ளிட்ட அணி சந்தித்து கலந்துரையாடல்

கேப்பாபுலவில் இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக நிலத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ள கேப்பாபுலவு மக்கள் போராட்டம் இன்று முப்பத்தி ஐந்தாவது நாளாக தொடர்கிறது.

பங்குனி மாதம்  1 ம் திகதி ஆரம்பித்த போராட்டம் மாதம் முழுவதும் வீதி வாழ்க்கையாக மாற்றிய சோக  சம்பவத்தோடு தொடர்கிறது .

காணிக்குள் கால் பதிக்கும் வரை தாம் போராட்டத்தை. கைவிடப்போவதில்லை என தெரிவிக்கும் கேப்பாபுலவு மக்கள் இன்றும் போராட்டத்தை முன்னேடுத்துள்ளனர்

இந்நிலையில் இன்றைய தினம் சர்வதேச மன்னிப்பு சபை செயலாளர் உள்ளிட்ட அணியினர்  போராட்டத்திலீடுபட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடினர் அரசாங்கம் காணிவிடுவிப்புக்கு காலஅவகாசம் வழங்கி இழுத்தடிக்காது மக்களுடைய காணிகளை உடனடியாக வழங்கவேண்டுமென இதன்போது தெரிவிக்கப்பட்டது.