மஹிந்த தொடாபில் 58 குற்றச்சாட்டுக்கள் விசாரணையில்

380 0

mahintha 647dqமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரின் குடும்பத்தினர் தொடர்பில் சுமத்தப்பட்டுள்ள 58 குற்றச்சாட்டுக்கள் குறித்து நிதிமோசடி பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நிதிமோசடி பிரிவினர் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபாலவையும் பிரதமர் ரணிலையும் சந்தித்தபோது இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது
குறித்த கலந்துரையாடலின்போது முக்கிய அமைச்சர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது நிதிமோசடி தடுப்பு பிரிவினரின் விசாரணை முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டன என்று ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது.
தற்போது வரை 493 முறைக்கேடுகள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இதில் 15 விசாரணைகள் குற்றப்புலனாய்வுத்துறையினரால் முன்னெடுக்கப்படுவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை நிதி மோசடிக்கு எதிரான விசாரணைப்பிரிவையும், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவையும் இணைப்பது தொடர்பான சட்டமூலம் ஒன்று விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது.
இதன்போது குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தமுடியும் என்று அரசாங்கம் எதிர்ப்பார்க்கிறது.