2024 பெப்ரவரி 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாட்டின் 76வது சுதந்திர தின நிகழ்விற்கான ஒத்திகையின் போது கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்படி , ஜனவரி மாதம் 30ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 02ஆம் திகதி வரை காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரையிலும், முற்பகல் 11.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும் , பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி முதல் மறுநாள் 04 ஆம் திகதி சுதந்திர தின நிகழ்வு முடிவடையும் வரை இந்த போக்குவரத்து திட்டம் அமுலில் இருக்கும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர் .