ஜனாதிபதி, பிரதமர், அரச ஊழியர்கள் , ஊடக தலைவர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களின் சொத்துப் பிரகடனங்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசத்தை நிர்ணயித்து இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபத்தில் இயற்றப்பட்ட லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் சட்டத்தின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய சட்ட ஏற்பாடுகளின் கீழ், அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள் மற்றும் ஊடகத் தலைவர்கள் அடங்கிய சுமார் 150,000 நபர்கள், வருடாந்தம் விரிவான சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த உத்தரவு முப்பத்தொரு வெவ்வேறு துறைகளில் உள்ள தனிநபர்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
உடனடி செயல்முறையைக் குறிக்கும் முகமாக இந்த கட்டாய வெளிப்பாட்டிற்கு இணங்குவதற்கான காலவகாசம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று நிர்ணயிக்கப்படுகிறது.