வடக்கில் அதிகரிக்கும் கள்ளச்சாரய உற்பத்தி

417 0

indexகிளிநொச்சி தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் சட்டவிரோதமாக  மேற்கொள்ளப்பட்ட கசிப்பு உற்பத்தி முறியடிக்கப்பட்டது.
நேற்று காலை தர்மபுரம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலிற்கமைய நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர், புளியம்பொக்கணைபகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபரை கைது செயததோடு, 28 போத்தல் கசிப்பினை உற்பத்தி செய்த பொருட்களையும்  மீட்டுள்ளனர்.
இதே சமயம் கல்லாறு பகுதியில் சட்ட விரோதமாக 20 போத்தல் கசிப்பினை எடுத்து சென்ற போது காவல்துறையினர் சந்தேக நபரையும், மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், பொருட்களும் இன்று கிளிநொச்சி பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்த உள்ளதாக தர்மபுரம் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை தர்மபுரம் காவல்துறையினருக்கு கடந்த வெள்ளிக்கிழமை கிடைத்த தகவலிற்கமைய 6 கொள்கலன்களில் சட்டவிரோத மது உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா அழிக்கப்பட்டுள்ளது.
கல்லாறு பகுதியில் இவ்வாறு மது உற்பத்தி செய்வதற்காக தயாராக இருந்த கோடாவே காவல்துறையினரால் அழிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட நபர் அடையாளம் காணப்பட்டதாகவும், எனினும் அவர் தப்பி சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிகின்றனர்.
குறித்த பகுதியில் அதிகளவில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றமை பதிவாகியுள்ளதுடன், குறித்த செயற்பாட்டில் ஈடுபடுபவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்ற பொதிலும், தொடர்ச்சியாக இவ்வாறு சட்டவிரோத மது உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.