தேடல்கள் உலகத்தில் உயிர்களின் இருப்பை தீர்மானிக்கும் – சிறிதரன்

424 0

srikaranதேடல்கள் இருக்கும் வரையும் உலகத்தில் உயிர்கள் தமது இருப்பை தீர்மானித்துக் கொள்ளமுடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
தேடல்கள் இருக்கும் வரைக்கும் உலகத்தில் உயிர்கள் தமது இருப்பை தீர்மானித்துக் கொள்ளமுடியும்.
அந்த தேடல்களை சரியான வகையில் உருவாக்கி கொள்வதற்கும் அந்த தேடலுக்கான காலத்தை நிர்ணயித்துக் கொள்வதற்கும் அவர்களுக்கான ஒரு பாதை வரலாற்றுப் பக்கம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்கள் கடுமையான யுத்தம்  காரணமாக தொழில் வாய்ப்புக்கள் யுத்த சூழ்நிலைகளுக்குள் தள்ளப்பட்டாலும் அது தற்போது இயல்பு நிலைக்கு திரும்பினாலும் பல்வேறுபட்ட இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்புக்களுக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக யாழ் மாவட்டத்தில் மட்டும் 82 ஆயிரம் இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்;பின்றியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் இருபதாயிரத்து 500 இற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதினாறாயிரத்து 800 பேரும் மன்னார் மாவட்டத்தில் பத்தொன்பதாயிரத்து 200 பேரும் வவுனியா மாவட்டத்தில் 24 ஆயிரத்து 300 பேரும் தொழில் வாய்ப்புக்களுக்காக தங்களால் பதிவு செய்துள்ளனர்.
இவையொரு தெரியாத ஒரு புள்ளி விபரங்களாகவும் பதிவுகளுக்கு உட்படுத்தப்படாதவர்களும் உள்ளனர்.
இவ்வாறு ஒரு வேலைப்படையைக் கொண்டுள்ள வடக்கு மாகாணம் இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டமானது மிக மிக முக்கியமானது.
கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வாய்க்கால் வெட்டுவதற்கான கருவியை கண்டு பிடித்துள்ளார்.
இவ்வாறான கண்டுபிடிப்புக்கள் எமது இளைஞர் யுவதிகளிடத்தில் உள்ளபோதும் ஆனால் அவர்களுக்கான ஊக்குவிப்புக்கள் வழங்கப்படுவதில்லை.
அத்துடன் அதன் உத்வேகத்திற்கான காரணங்கள் தேடிக்கொடுக்கப்படுவதில்லை.
இவை வழங்கப்படும் போது உலகத்தில் இவர்களும் சாதிக்கமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.