நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 803 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 562 சந்தேக நபர்களும் ஏனைய குற்றங்களுடன் தொடர்புடைய 241 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 562 பேரில் 05 பேருக்கு எதிராக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் போதைப்பொருளுக்கு அடிமையாக ஒருவர் புனர்வாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தால் தேடப்பட்டு வரும் பட்டியலில் இருந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏனைய குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 241 சந்தேக நபர்களில் 11 பேர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் திறந்த பிடியாணை பெற்றுள்ள நிலையில் 214 பேர் ஏனைய குற்றங்கள் தொடர்பில் திறந்த பிடியாணை பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தலைமறைவான 07 சந்தேக நபர்களும், குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த 09 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.