கவுதமாலா நாட்டில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

63 0

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் வெள்ளிக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது.

மத்திய அமெரிக்காவில் உள்ள நாடான கவுதமாலாவில் வெள்ளிக்கிழமை இரவு 11:52 மணிக்கு, டாக்சிஸ்கோ நகரத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் (நான்கு மைல்) தொலைவில் 108 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய நகரமான ஆன்டிகுவா கவுதமாலாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிகிறது.“இதுவரை உயிரிழப்பு அல்லது சேதம் எதுவும் பதிவாகவில்லை. அதிகாரிகள் இதனை கண்காணித்து வருகின்றனர்” என்று சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ரோடோல்போ கார்சியா தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் கூற்றுப்படி, கவுதமாலாவின் 90 சதவீத பகுதிகள் பூகம்பத்திற்கு ஆளாகின்றன என கூறப்படுகிறது.