பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் புதிய கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம்

81 0

‘வலுவான பொருளாதாரம் – வெற்றிகரமான பயணம்’ எனும் தொனிப்பொருளில் புதிய அரசியல் கூட்டணியின் முதலாவது மக்கள் கூட்டம் இன்று சனிக்கிழமை (27)  மாலை ஜாஎல நகரில் இடம்பெற்றது. பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமான புதிய கூட்டணியின் அறிமுக பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

புதிய அரசியல் கூட்டணியின் செயற்பாட்டுத் தலைவர் அநுர பிரியதர்சன யாப்பா, நிறுவுனர் நிமல் லான்சா, அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, புதிய கூட்டணியின் கம்பஹா மாவட்டத் தலைவர் நளின் பெர்னாண்டோ, ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க, நீர்கொழும்பு முன்னாள் மேயர் தயான் லான்சா, உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கலைஞர்கள், சட்டத்தரணிகள், தொழில் வல்லுனர்கள் உட்பட பெருந்தொகையான ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.