முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விபத்தில் இளைஞர் பலி!

77 0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு  பகுதியில் நேற்று வியாழக்கிழமை (25) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர் .

உழவு இயந்திரமும் சிறியரக பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார் .

பட்டா வாகனத்தில் பயணித்த குறித்த இளைஞன் விபத்தில் படுகாயமடைந்து  புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உழவு இயந்திரத்தின்  சாரதி புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்திற்குள்ளான இரண்டு வாகனங்களும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன .

விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .