பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: 550-வது நாளை எட்டும் போராட்டம்

86 0

சென்னையின் 2-வது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூரில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் 550-வது நாளை இன்று (ஜன.26) எட்டுகிறது. இன்றுஉண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணிக்கு அம்பேத்கர் திடலில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.இதனையொட்டி அந்தப் பகுதியில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.