காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவர் ஆலோசனையின்றி வீட்டிலேயே சிகிச்சை எடுத்து கொள்ளக்கூடாது

79 0

காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனை பெறாமல் வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் அறிவுறுத்தியுள்ளார்.

திருவொற்றியூர் அரசு மருத்துவமனையில் எம்ஆர்எஃப் நிறுவனத்தின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புநிதி உதவியின் கீழ் ரூ.55 லட்சம் மதிப்பில் கண் அறுவை சிகிச்சை அரங்கத்தையும், எச்பிசிஎல் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட ரூ.20லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களையும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

திருவொற்றியூர் பகுதி மக்கள்கண் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வசதியாக இந்த மருத்து வமனையில் புதிய கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் அனைத்து மருத்துவர்களும் பணியில் உள்ளனர். காலிபணியிடங்கள் இல்லை. இருப்பினும், பொதுமக்களின் நலனைக்கருத்தில்கொண்டு, எதிர்காலத்தில் கூடுதலான மருத்துவர்கள் இங்கு நியமிக்கப்படுவார்கள். அதன்மூலம் 24 மணி நேரமும் இங்கு சிகிச்சை பெறுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்படும்.

உயிரிழப்பு அபாயம்: தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. இறப்பு களைப் பொறுத்தவரை மிகவும் குறைவு. குழந்தைகளுக்கு காய்ச் சல் பாதிப்பு ஏற்படும்போது, மருத்துவமனைக்கு வராமல், மருத்துவஆலோசனை பெறாமல் வீட்டிலேயே சிகிச்சை பெறுவதால்தான் இறப்புகள் ஏற்படும் சூழல் நிலவு கிறது.

எனவே, குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவ ஆலோசனை பெறாமல் வீடுகளில் சிகிச்சை பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிர மணியன் கூறினார்.