சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தல்

104 0

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாணவர் ஒன்றிய செயலாளர் சோதிராசா சிந்துஜன் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“இந்த இலங்கை தீவிலே தமிழ் மக்கள் தங்கள் இருப்புக்களை தக்க வைப்பதற்கு அன்றிலிருந்து இன்று வரை தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

அதனடிப்படையில் எதிர்வரும் 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தினை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய பிரகடனத்தை பொதுமக்களுக்கு தெரியபடுத்துகின்றோம்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.