சிறிதரனுக்கு மன்னாரில் வரவேற்பு நிகழ்வு

115 0

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை வரவேற்கும் முகமாக மன்னாரில் வரவேற்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த வரவேற்பு நிகழ்வானது, நேற்றைய தினம் (25.01.2024) மாலை 4.30 மணியளவில் மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மன்னாரை வந்தடைந்த சிவஞானம் சிறிதரன், மன்னார் நகரில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.தொடர்ந்து, அவர், மன்னார் ஆத்தூர் பிரதான வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளைக்கு மோட்டார் சைக்கிள் பவனியாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அதேவேளை, குறித்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கோடீஸ்வரன், பா.அரியநேந்திரன், சிறிநேசன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.