பெலியத்தையில் ஐவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் நேற்று (25) அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த சந்தேக நபர் இன்று தெய்யந்தர நீதிவான் முன்னிலையில் ஆஜ்படுப்படுத்தப்பட்டபோது சந்தேக நபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அக்குரஸ்ஸ, பங்கம பிரதேசத்தில் வைத்து நேற்று முன்தினம் (24) கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது மேலும் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த நபரே இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்டவர் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.