களனி கங்கையின் பூகொட – கனம்பல்ல பாலத்திற்கு அருகில் இன்று (25) பிற்பகல் 2 மணி அளவில் பாரிய முதலை ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட முதலை சுமார் 15 அடி நீளம் உள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
முதலையின் சடலத்தை கண்ட இளைஞர்கள் அதை இழுத்துச் சென்று ஆற்றின் நடுவில் கைவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.