காங்கேசன்துறையில் சட்டவிரோத திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி போராட்டம்

78 0

காங்கேசன்துறையில் மக்களது காணிகளை அபகரித்து சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி புதன்கிழமை (24) முதல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

திஸ்ஸ விகாரையை அகற்ற கோரி, ஒவ்வொரு பெளர்ணமி தினமும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையிலேயே இன்றும் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு திஸ்ஸ விகாரையில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் இடம்பெற்றது.