முல்லேரியா களனி ஆற்று மாவத்தை சந்தியில் இரத்தக்கறை படிந்த வாள்கள்களுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று சோதனையிடப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியில் இருந்து மூன்று வாள்கள், ஒரு இரும்புக் கம்பி, ஒரு கத்தி மற்றும் இரண்டு தோட்டாக்களுடன் சந்தேக நபர்கள் முல்லேரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகத்துக்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றை சோதனையிட்ட போது இந்த ஆயுதங்களை கண்டெடுத்ததாகவும் முச்சக்கரவண்டியில் 6 பேர் பயணித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.