தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மூன்று பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு நேற்று 24 ஆம் திகதி முதல் இடமாற்றம் வழங்கியுள்ளார்.
அதன்படி, போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த கே.கடுப்பிட்டிய மேல் மாகாண வடக்கு பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்.மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம். ஆர். ஏ. எம். செனரத் அந்தப் பதவியிலிருந்து போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, யாழ் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக ஜே.இ.கே.ஜெயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.