ஹம்பாந்தோட்டை , குடாவெல்ல மோதரவத்த கடலில் குளிக்கச்சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது
இவ்வாறு கடலில் குளிக்கச்சென்றவரில் களுத்துறையைச் சேர்ந்த 35 வயதான ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் கம்புறுப்பிட்டியவைச் சேர்ந்த 25 வயதுடைய ஆணொருவர் காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போனவரைத் தேடும் நடவடிக்கை தொடர்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.
5 பேர் அடங்கிய குழுவினர் குறித்த பகுதிக்கு வருகை தந்ததாகவும் அதில் மூவர் கடலில் குளிக்கச் சென்ற போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.