களுத்துறை, கொனபொல பிரதேசத்தில் அழகுக்கலை நிபுணர் ஒருவரை கத்தியால் குத்தி தங்க நகையை திருடிச் சென்றதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அழகுக்கலை நிலையத்துக்கு இளைஞர் ஒருவருடன் அழகுக்கலை நிமித்தம் வந்த பெண் ஒருவர் குறித்த அழகுக்கலை நிபுணரை கத்தியால் குத்தி அவரது கழுத்தில் இருந்த தங்க நகையை திருடிச் சென்றுள்ளார்.
இவ்வாறு திருடப்பட்ட நகையானது 350,000 ரூபாய் பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.