ஜெனீவா பிரேரணையின் பரிந்துரைகளை அடுத்த இரண்டு வருடங்களில் அமுலாக்க நடவடிக்கை – இலங்கை அரசாங்கம் உறுதி

380 0

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பரிந்துரைகளை அடுத்த இரண்டு வருடங்களில் அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கு அரசாங்கம் பொறுப்பு என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைக்கு அரசாங்கம் உறுதிமொழி வழங்கவில்லை என்றும், அவ்வாறான விசாரணை ஒன்று தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெற்றால், விடுதலைப் புலிகள் இழைத்தக் குற்றங்களை யாரிடம் விசாரணை செய்வது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனினும், தற்போது அரசாங்கம் சகல இன மக்களுக்கும் சமமான அதிகாரப் பகிர்வை வழங்குவதையே இலக்காக கொண்டிருக்கிறதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.