ஊவா மாகாணத்தின் ஆசிரிய உதவியாளர்கள், ஆசிரியர் கலாசாலையில் இணைவதற்கான விண்ணப்பங்களில் மாகாண கல்விப் பணிப்பாளரை கைச்சாத்திடுமாறு, மாகாண முதலமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் கலாசாலைக்கு செல்வதற்கான விண்ணப்பத்தில் மாகாண கல்விப் பணிப்பாளர் கைச்சாத்திடாதமை தொடர்பில் கடந்த சில தினங்களில் பதுளையில் பிரச்சினை நிலவியது.
குறித்த ஆசிரியர் உதவியாளர்களது விண்ணப்பங்களை பாடசாலை அதிபர்களும், வலைய கல்வி பணிப்பாளர்களும் அங்கீகரித்துள்ள போதும், மாகாண கல்வி பணிப்பாளர் அதில் கைச்சாத்திட மறுத்ததால் இந்த நிலைமை ஏற்பட்டது.
இது தொடர்பில் மாகாண முதலமைச்சர் தலைமையில் அதிகாரிகள் மட்டப் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலையின் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவிக்காத பட்சத்தில், குறித்த ஆசிரியர் உதவியாளர்களை ஆசிரிய கலாசாலை தெரிவுக்கான நேர்முகத் தெரிவுக்கு அனுப்ப கையொப்பமிடுமாறு மாகாண கல்வி பணிப்பாளருக்கு கூறி இருப்பதாக, மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.