வடகொரியாவினால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள அணுவாயுத அச்சுறுத்தலை, தனித்து தீர்த்துக் கொள்ள முடியும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் ஊடகம் ஒன்றுக்கு அவர் இதனைக் கூறியுள்ளார்.
வடகொரியா விடயத்தில் சீனா சிறந்த செல்வாக்கைக் கொண்டுள்ளது.
எனவே சீனா அமெரிக்காவுக்கு உதவவோ, உதவாமல் இருக்கவோ தீர்மானிக்க முடியும்.
அமெரிக்காவுக்கு உதவ தீர்மானித்தால் அது சீனாவுக்கே நல்லது.
எவ்வாறாயினும், இந்த விடயத்தை அமெரிக்காவினால் தனித்து தீர்த்துக் கொள்ளவும் முடியும் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் ஜனாதிபதி சீ ஜின்பின் அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் ட்ரம்ப் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.