உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டும் – அமைச்சர் துமிந்த திஸாநாயக்க

278 0

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை விரைவில் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சி இருப்பதாக அதன் பொது செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் மேய் தின நிகழ்வு கண்டி – கெட்டம்பே மைதானத்தில் நடத்தப்படவுள்ள நிலையில், அதன் ஏற்பாட்டுப் பணிகளை அமைச்சர் கண்காணிக்க சென்றிருந்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த ஆண்டுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதியும் இருக்கிறார்.

மேலும் தேர்தலை பிற்போடும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்று அவர் கூறியுள்ளார்.