யுத்த காலத்தில் வடக்கு வைத்தியசாலைகளில் கடமையாற்றிய தொண்டர் ஊழியர்கள் நிரந்தரமாக்குவதற்கு முடிவெடுத்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடக்கு சுகாதார அமைச்சர் மற்றும் வடக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோருடனான சந்திப்பின் பின்னர் ஊடகளுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவிக்கையில்
யுத்த காலத்தில் எமது வைத்தியசாலைகளின் கட்டமைப்பை இயக்குவதற்கு உதவி செய்த தொண்டர் ஊழியர்களை நிரந்தர சேவையில் இணைந்துக் கொள்வது தொடர்பாக முடிவெடுத்துள்ளோம்.
ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்து தகுதிக்கேற்ப மாகாண சுகாதார பிரிவில் இணைந்து கொள்வதற்கு முடிவு செய்துள்ளோம். மத்திய அமைச்சின் நிர்வாகத்தில் வருகின்ற வைத்தியசாலைகளின் அனைத்து தொண்டர் ஊழியர்களும் நிரந்தர ஊழியர்களாக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 12 பேர் மாத்திரம் அடிப்படைத் தகைமைகள் இல்லாத காரணத்தினால் அவர்களுக்கு நியமனங்கள் வழங்க முடியவில்லை. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் திட்டத்தை தயாரிக்கும் படிகூறியுள்ளோம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மேலதிக பிரிவுகளின் அபிவிருத்திக்கு 4 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் அதுக்குரிய கட்டடங்களை அமைக்க முடியும். யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் குழந்தை வைத்தியசாலையை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அத்துடன் சிறுநீரக வைத்தியசாலை அமைப்பதற்கு திட்டங்கள் கிடைத்ததும் கட்டடம் அமைக்க முடியும் சுதேச வைத்தியம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக தனியார் சுதேச வைத்தியர்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. வடக்கு சுகாதார அமைச்சர் வடக்கு மாகாண சபையில் நியதிச்சட்டங்களை உருவாக்கி தனியார் சுதேச வைத்தியர்களை கண்காணிக்க திர்மானிக்கப்பட்டது.
https://youtu.be/VvuPCGcTg0I