மக்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகள் முக்கியமானவை

119 0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டதாக கட்சி அறிவித்துள்ளது எமது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் என வட மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,

அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த உள்ளூராட்சி வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி வெளியேறியது. ஆனால் கட்சியின் அன்றைய முடிவை மீள் பரிசீலனைக்கு உட்படுத்தி இனத்தின் ஒற்றுமை கருதி பொதுச் சின்னத்தில் கூட்டமைப்பாக கடந்த காலத்தில் சில கசப்பான சம்பவங்களால் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அனைவரையும்  ஒன்றிணைத்து ஒரு குடையின் கீழ் பயணிக்க தீர்க்க முடிவை கட்சியில் ஏகமனதாக எடுங்கள்.

தலைவர் தெரிவுக்கு முன்பாக மக்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் வழங்கிய வாக்குறுதிகள் முக்கியமானவை. அதன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மீண்டும் இணைந்து பொதுச் சின்னத்தில் இனத்தின் ஒற்றுமையையும் அரசியல் விடுதலையையும் வென்றெடுப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.