கொழும்பில் சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட இணைய கடன் மோசடி பேர்வழிகள் எவ்வாறு தன்னை நெருக்கடிக்குள் சிக்கவைத்தனர் என்பதை பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் விபரித்துள்ளார்.
தன்னை எவ்வாறு மேலும் மேலும் கடன்பெறச்செய்தனர் தன்னால் அதனை திருப்பி செலுத்த முடியாத நிலையேற்பட்டவேளை எவ்வாறு தன்னை மிரட்டினார்கள் என்பதை அவர் தெரிவித்துள்ளார்.
எனது மோட்டார் சைக்கிளை திருத்தவேண்டியிருந்ததாலும் மொபைல்போனிற்கான மாதாந்த கட்டணத்தை செலுத்தவேண்டியிருந்ததாலும் நான் அவர்களிடமிருந்து 30000 ரூபாயினை பெற்றுக்கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் என்னிடமிருந்து எனது அடையாளஅட்டையின் விபரங்களையும் அடையாள அட்டையுடன் நான் காணப்படும் செல்பியையும் கேட்டனர் என பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் மொபைல்போனை பயன்படுத்தி என்னை விண்ணப்படிவமொன்றை பூர்த்தி செய்யுமாறு கேட்டனர் அதன் பின்னர் அவர்கள் எனது வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் முதலில் கடனை பெற்ற பின்னர் நான் பெறக்கூடிய கடனை அவர்கள் அதிகரித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நான் பணத்தை திருப்பி செலுத்தவேண்டிய தினத்தன்றும் அதற்கு மறுநாளும் எனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்தன அவர்கள் நான் பணத்தை செலுத்தவேண்டியுள்ளதை நினைவுபடுத்தினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது நாள் பலரிடமிருந்து எனக்கு மிரட்டும் அச்சுறுத்தும் அழைப்புகள் வந்தன அவர்கள் எனது படங்களும் தொலைபேசி விபரங்களும் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தனர் அந்த படங்களை அம்பலப்படுத்தினால் என்ன நடக்கும் என நினைத்து பார்க்குமாறு அவர்கள் மிரட்டினார்கள் பணத்தை மீள செலுத்துமாறும் அல்லது பிரச்சினை எனவும் எச்சரித்தனர் என அந்த நபர் தெரிவித்துள்ளார்.